TNPSC Thervupettagam

நாகர் கீர்த்தன் - குரு நானக்கின் 550வது நினைவு தினம்

August 2 , 2019 1849 days 715 0
  • பிரிவினைக்குப் பின்பு முதன் முறையாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள நன்கானா சாஹிப் மாவட்டத்திலிந்து வெளியே எடுத்து வரப்பட்ட குரு கிரந்த சாஹிப்பைக் கொண்டுள்ள நாகர் கீர்த்தன்” ஆனது இந்தியாவின் அமிர்தசரஸில் உள்ள அட்டாரிக்கு வந்தடைந்தது.
  • “நாகர் கீர்த்தன்” என்பது ஒரு மதம் சார்ந்த பேரணியாகும்.
  • இந்தப் பேரணியானது சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவின் 550வது பிறந்த தின நினைவை அனுசரிப்பதற்காக பக்தர்களால் நடத்தப்பட்டது.
  • இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் லோதி என்ற இடத்தில்  நிறைவடையவிருக்கின்றது.
  • குரு நானக் தேவ் என்பவர் 1469 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் லாகூரிற்கு அருகில் உள்ள தால்வண்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இந்தக் கிராமம் தற்பொழுது நன்கானா சாஹிப் என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்