- ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA - Armed Force Special Power Act) கீழ் அடுத்த ஆறு மாதக் காலத்திற்கு முழு நாகாலாந்து மாநிலமும் தொந்தரவுக்குப்பட்டப் பகுதியாக (distrubed Area) அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம், எத்தகு முன் அறிவிப்பு ஆணையும் இன்றி (without any prior notice) எங்கும், எவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆயுதப் பாதுகாப்பு படைகள் மேற்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
- மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக விரோத சக்திகளால் கொலைகள், கொள்ளைகள் மற்றும் பணம் பறிப்பு போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஆயுதப் பாதுகாப்பு படைகள் அவற்றைக் களைவதில் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு முழு நாகாலாந்து மாநிலமும் தொந்தரவுக்குட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு ஆண்டுகளாக AFSPA சட்டம் நாகாலாந்து மாநிலத்தில் அமலில் உள்ளது.
- நாகா கிளர்ச்சிக் குழுவான NSCN-IM அமைப்பின் பொதுச் செயலாளரான துயிங்கலேன் முய்வா மற்றும் நாகலாந்திற்கான அரசுப் பிரதிநிதி (Interlocutor) R.N. ரவிக்கு இடையே பிரதமர் மோடியின் முன்னிலையில் நட்புறவு கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகஸ்ட் 3, 2015-ல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நாகாலாந்தில் AFSPA-சட்டம் திரும்ப பெறப்படவில்லை.
AFSPA
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் “தொந்தரவுக்குட்பட்ட பகுதி” (disturbed area) என்று அறிவிக்கப்படும் பகுதிகளில், கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்த சாத்தியப்படக்கூடும் என்ற அடிப்படையில் கண்டறியப்படும் எந்த ஒரு சொத்துகளை அழிக்கவும், சந்தேகிக்கப்படும் எவரது வீட்டினையும் முன்னறிவிப்பாணை ஏதும் இன்றி சோதனை செய்யவும், அவர்களை கைது செய்யவும், மேலும் அவர்களை கொன்றிடவும் மாநில மற்றும் மத்திய காவற் படைகளுக்கும், ஆயுத இராணுவப் படைகளுக்கும் அதிகாரமளிக்கும் சட்டமே 1958-இல் ஏற்படுத்தப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமாகும்.
தொந்தரவுக்குட்பட்ட பகுதிகள்
- மாநிலத்தின் வெவ்வெறு மத, இன, மொழியிய, பிராந்திய, சாதிய அல்லது சமுதாய குழுக்களிடையே மோதல்களும் அல்லது வன்முறை வேறுபாடுகளும் தோன்றிடின் அப்பகுதியானது தொந்தரவுக்குள்ளான பகுதியாக மாநில அல்லது மத்திய அரசால் கருதப்படும்.
- குறிப்பிட்ட அல்லது முழு பகுதிகளையும் தொந்தரவுக்குள்ளான பகுதியாக அறிவிக்க, AFSPA சட்டத்தின் பிரிவு (3)-ன் கீழ் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அல்லது யூனியன் பிரதேசத்தின் ஆளுநரால் இந்திய அரசிதழில் (Gazatte of India) வெளியிடுவதற்காக வழங்கப்படும் அறிவிப்பாணையை தொடர்ந்து, மத்திய அரசு குடிமை உதவிகளுக்காக (Civilian Aid) ஆயுதப் படைகளை அக்குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பும்.
- ஒருமுறை ஒரு குறிப்பிட்ட பகுதி தொந்தரவுக்குள்ளான பகுதியாக அறிவிக்கப்பட்டால், தொந்தரவுக்குள்ளான பகுதிகள் (சிறப்பு நீதிமன்றங்கள்) சட்டம் 1976-ன் கீழ் [Distrubed Area (Special Court) Act-1976] குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு இதுவரை நடப்பில் உள்ள நிலைமை (Status Quo) அங்கு பேணப்பட வேண்டும்.