TNPSC Thervupettagam

நாகாலாந்து நகராட்சி அமைப்புகள் மசோதா 2023

November 15 , 2023 247 days 275 0
  • நாகாலாந்து சட்டமன்றம் ஆனது, 2023 ஆம் ஆண்டு நாகாலாந்து நகராட்சி அமைப்புகள் மசோதாவினை நிறைவேற்றி, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டைத் தக்க வைத்துக் கொண்டது.
  • முன்னதாக, 2001 ஆம் ஆண்டு நாகாலாந்து நகராட்சி அமைப்புகள் சட்டத்தினை குரல் வாக்கெடுப்பு மூலம் சபை திரும்பப் பெற்றது.
  • பல நாகா அமைப்புகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) பெண்களுக்கான இட ஒதுக்கீடு தங்கள் சமூகத்தின் வழக்காற்று சட்டங்களுக்கு எதிரானது என்று கூறின.
  • அதன்பிறகு, வடகிழக்கு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் எதுவும் நடத்தப் பட வில்லை.
  • முந்தைய நகராட்சிச் சட்டத்தில் கூறப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பொறுப்பிற்கு பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடுக்கான விதிமுறையானது, 2023 ஆம் ஆண்டு நாகாலாந்து நகராட்சி மசோதாவில் சேர்க்கப் பட வில்லை.
  • குறிப்பிட்ட நகராட்சி அல்லது நகர சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு ஆனது, தங்கள் சொந்த அதிகார வரம்பில் வரிகள் அல்லது கட்டணங்கள் குறித்த முடிவினை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்