TNPSC Thervupettagam

நாகாலாந்து மாநில ஸ்தாபன தினம்

December 4 , 2021 995 days 476 0
  • நாகாலாந்து மாநிலமானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று தனது 59வது மாநில ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
  • நாகாலாந்திற்கு கொஹிமா தலைநகராக அறிவிக்கப்பட்டு 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று மாநில அந்தஸ்து வழங்கப் பட்டது.
  • இதற்கு முன்பாக, நாகா மலைப் பகுதிகளின் ஒரு தனிப்பகுதியை உருவாக்குவதற்காக நாகா பிரிவின் தலைவர்களும் மத்திய அரசும் 1957 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டன.
  • இவ்வாறாக, நாகாலாந்திற்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்காக 1962 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலச் சட்டமானது பாராளுமன்றத்தினால் இயற்றப் பட்டது.
  • இந்திய ஒன்றியத்தின் 16வது மாநிலமாக அசாமிலிருந்துப் பிரிக்கப்பட்ட முதல் வட கிழக்கு மாநிலம் நாகாலாந்து ஆகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்