நாகாலாந்து முதல்வராக டி.ஆர்.ஜீலியாங் மீண்டும் பதவியேற்றுள்ளார்.
நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நகராட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விவகாரத்தால் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டம் காரணமாக ஜீலியாங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு அவரது கட்சியைச் சேர்ந்த ஷுரோசெலி லீசீட்சு முதல்வராகப் பொறுப்பேற்றார்.
சட்டப் பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று ஆளுநர் உத்தரவிட்டார். பெரும்பான்மையினை ஜீலியாங் நிரூபித்த பிறகு மற்ற அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். பதவியில் இருந்து விலகிய 5 மாதத்தில் ஜீலியாங் மீண்டும் முதல்வராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.