TNPSC Thervupettagam
October 26 , 2020 1496 days 549 0
  • சமீபத்தில் இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் துப்பாக்கி சுடுதல் வரம்பில் நாக் என்ற இராணுவ டாங்கிகள் மூலம் எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் இறுதி பயனர் சோதனையை மேற்கொண்டது.
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.
  • இந்த ஏவுகணை இப்போது ஆயுதப் படைகளில் சேர்வதற்குத் தயாராக உள்ளது.
  • இந்தியாவின் மூன்றாம் தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான இது அனைத்து வானிலையிலும் செயல்படக் கூடியது ஆகும். மேலும் ஏவப்பட்ட பின் தனது இலக்கை நிர்ணயிக்கும் திறன் கொண்ட இது தானாகவே அதன் இலக்கைத் தொடரும்.
  • இது நிலம் மற்றும் விமானம் சார்ந்த தளங்களில் இருந்து ஏவப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்