ப்ரோஸ்பினா என்றும் அழைக்கப்படும் நாக், ஒருமுறை சுடப்பட்டு அதன் பிறகு எந்த ஒரு தொழில்நுட்ப உதவியும் தேவைப்படாத வகையிலான தாக்குதல் திறன் கொண்ட மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்திலான ஒரு பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை ஆகும்.
நாக் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணையானது, ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் ஏவுகணை உருவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் ஏவுகணை உருவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட மேலும் நான்கு ஏவுகணைகள் அக்னி, ஆகாஷ், திரிசூல் மற்றும் பிருத்வி ஆகியன ஆகும்.
நாக் ஏவுகணை 4 கி.மீ. வரை உள்ள இலக்கைத் தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
இது மிக அதிக வெடிப்புத் திறன் கொண்ட பீரங்கி எதிர்ப்பு (HEAT) ஆயுதத்தினைக் கொண்டுள்ளது.