விண்வெளி சுற்றுப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட 30 ஆண்டு கால அளவிலான ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு, நாசா-ஜாக்சா நிறுவனங்களின் ஜியோடெயில் என்ற ஒரு கூட்டு விண்கலத்திற்கான பணி நடவடிக்கைகள் முடிவடைந்தன.
இது 1994 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
இந்த ஆய்வுப் பணியானது சர்வதேச சூரிய நிலப்பரப்பு இயற்பியல் (ISTP) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது புவியின் காந்த கவசக் குமிழான காந்த மண்டலத்தின் அமைப்பு மற்றும் இயக்கவியல் பற்றிய மாபெரும் தரவுத் தொகுப்பைச் சேகரித்தது.
ஜியோடெயில் ஆய்வுப் பணியானது முதலில் நான்கு வருடம் இயக்கப்படுவதற்காக திட்டமிடப் பட்டது, ஆனால் அதன் உயர்தர ரீதியிலான தரவு வழங்கீட்டின் காரணமாக இந்த ஆய்வுப் பணிக் காலமானது பல முறை நீட்டிக்கப்பட்டது.
ஜியோடெயிலின் இரண்டு தரவுப் பதிவுக் கருவிகளுள் ஒன்று 2012 ஆம் ஆண்டில் பழுது அடைந்தாலும், அதன் இரண்டாவது கருவி 2022 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று பழுதடையும் வரை தொடர்ந்து இயங்கி வந்தது.