சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) நாசாவின் நியூட்ரான் நட்சத்திரத்தின் உள் அமைப்பை ஆய்வு செய்யும் (Neutron star Interior Composition Explorer - NICER) தொலைநோக்கியானது இதுவரை இல்லாத வகையில் எக்ஸ் கதிர் ஒளிச் சிதறலை (வெடிப்பு) கண்டறிந்துள்ளது.
பல்சரின் மேற்பரப்பில் ஒரு பெரிய வெப்ப ஆற்றல் மின்வெட்டொளி காரணமாக இந்த எக்ஸ்ரே ஒளிச் சிதறல் ஏற்பட்டது.
ஒருமீயொளிர் விண் முகிலாக (supernova) நீண்ட காலத்திற்கு முன்பு வெடித்த ஒரு நட்சத்திரத்தின் நொறுக்கப்பட்ட எச்சங்கள் பல்சர் என்று அழைக்கப் படுகின்றன.
வகை I - எக்ஸ்ரே வெடிப்பு என வானியலாளர்கள் வகைப்படுத்தும் இந்த வெடிப்பானது 20 வினாடிகளில் அதிக அளவிலான ஆற்றலை வெளியிடுகின்றது. இந்த ஆற்றலானது கிட்டத்தட்ட 10 நாட்களில் சூரியன் வெளிப்படுத்தும் ஆற்றலுக்குச் சமமாகும்.