சமீபத்தில், நாசாவின் OSIRIS-REx விண்கலம் ஆனது ஒரு பெட்டகத்தினைப் பூமியின் மேற்பரப்பில் விடுவித்து, அமெரிக்காவின் உட்டா எனுமிடத்தில் தரையிறக்கியது.
101955 பென்னு என்ற குறுங்கோளின் மேற்பரப்பில் இருந்து OSIRIS-REx விண்கலம் சேகரித்த சுமார் 250 கிராம் பாறைகள் மற்றும் தூசிகள் இதில் கொண்டு வரப் பட்டு உள்ளது.
OSIRIS-REx விண்கலமானது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,650 அடி அகலம் (500 மீட்டர்) கொண்ட பென்னு குறுங்கோளை நோக்கி ஏவப்பட்டது.
பென்னு என்பது சூரியனைச் சுற்றி வரும் ஒரு குறுங்கோள் (436 நாட்கள் சுழற்சி காலம் கொண்ட) ஆகும்.
பென்னு குறுங்கோள் 2178 மற்றும் 2290 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பூமி மீது மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.