TNPSC Thervupettagam

நாடு முடக்கத்தின் போது சிறப்புப் பொருளாதார மண்டலம்

April 3 , 2020 1571 days 525 0
  • நாடு முடக்கத்தின் போது நாட்டில் உள்ள ஏறத்தாழ 280 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ – Special Economic Zone) மருந்துகள், மருந்து சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
  • இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 18%  என்ற அளவிற்குப் பங்களிக்கின்றன. 
  • 2019-20 ஆம் ஆண்டில் SEZன் ஏற்றுமதியானது அதிகரித்து, 110 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
  • SEZகள் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005ன் கீழ் SEZகளைச் செயல்படுத்த மாநிலங்கள் அனுமதிக்கப் படுகின்றன.
  • இந்தச் சட்டமானது ஏற்றுமதி ஊக்குவிப்பில் மாநில அரசுகளின் பங்கை வரையறை செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்