TNPSC Thervupettagam

நாட்டின் ஐந்து முன்னணி காவல் நிலையங்கள்

January 11 , 2018 2380 days 806 0
  • நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுள் ஒன்றாக தமிழகத்தைச் சேர்ந்த இரு காவல் நிலையங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் (Smart Police Station Category) வகைப்பிரிவில், தமிழகத்தின் கோவை மாவட்ட ஆர்.எஸ். புரம் B-2 காவல் நிலையம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • அனைத்திந்திய அளவிலான இந்த வகைப்பாட்டில், நாட்டின் ஐந்தாவது சிறந்த காவல் நிலையமாக சென்னையிலுள்ள K-4 அண்ணா நகர் காவல் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேச மாநிலத்தின் டேக்கன்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் (டிஜிபிக்கள்) மாநாட்டில் இதற்கான பரிசினை மத்திய உள்துறை அமைச்சரிடம் தமிழக காவல்துறை அதிகாரிகள் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்