TNPSC Thervupettagam

நாட்டின் மிக நீண்ட கால அவை கூட்டத் தொடர்

August 4 , 2022 717 days 405 0
  • 2021 ஆம் ஆண்டில், 61 நாட்கள் என்ற அளவில் நாட்டிலேயே மிக நீண்ட காலச் சட்ட மன்ற கூட்டத் தொடரினைக் கேரள அரசு நடத்தியது.
  • 2020 ஆம் ஆண்டில், ஆரம்பகட்ட கோவிட்-19 பெருந்தொற்றின் போது சட்டமன்ற அமர்வுகளைக் கூட்டுவதன் அடிப்படையிலானப் பட்டியலில் கேரளா எட்டாவது இடத்திற்குச் சென்றது.
  • 40 நாட்கள் அளவிற்கு கூட்டத் தொடர் நடத்தியதன் மூலம், கர்நாடகா இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
  • அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (34 நாட்கள்), ஒடிசா ஆகியவை உள்ளன.
  • 28 மாநிலச் சட்டசபைகளில் 17 மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்தின் சட்ட சபை 20 நாட்களுக்கும் குறைவாகவே கூடியுள்ளன.
  • ஆந்திரப் பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் 10 நாட்களுக்கும் குறைவாகக் கூடியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்