பாரம்பரிய நடன வடிவத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கு பெற்ற வகையில் நாட்டியாஞ்சலி திருவிழாவில் 7000ற்கும் மேற்பட்ட பரத நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர்.
இது சிதம்பரத்தில் நடராஜர் ஆலயம் என்றறியப்படும் சபாநாயகர் ஆலயத்தில் நடத்தப்பட்டது.
இந்த வரலாற்றுச் சாதனை படைக்கும் நிகழ்வானது ஒரே மாதிரியான நடனத்தைப் பல்வேறு வயதைச் சேர்ந்த 7190 நடனக் கலைஞர்களால் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியானது 2017 ஆம் ஆண்டில் சென்னையில் 4525 நடனக் கலைஞர்களால் ஏற்படுத்தப்பட்ட உலகச் சாதனையை முடியடித்தது.