TNPSC Thervupettagam

நாட்டிற்கான கூட்டு ஒப்பந்த கட்டமைப்பு

September 23 , 2018 2256 days 749 0
  • உலக வங்கி மன்றமானது இந்தியாவின் உயர்நோக்கங்களான அதிகபட்ச, நீடித்த மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சியோடு ஒத்துப்போகும் வகையில் இந்தியாவிற்கான உயர் லட்சியமுடைய 5 ஆண்டுகால “நாட்டிற்கான கூட்டு ஒப்பந்த கட்டமைப்பை” அங்கீகரித்திருக்கின்றது.
  • இந்த கட்டமைப்பானது இந்தியாவை தாழ்-நடுத்தர வருமான வகையிலிருந்து உயர் நடுத்தர வருமான வகைக்கு உயர்ந்துள்ளதாக அங்கீகரிக்கின்றது.
  • இந்த கட்டமைப்பு மேலாண்மை அமைப்பின் முக்கிய கருவியாகும். மேலும் இது உலக வங்கி மன்றத்தின் நாடு சார்ந்த திட்டங்களை வழிகாட்டுவதற்கும் சீராய்வு செய்வதற்கும் அவற்றின் பலன்களை ஆய்வு செய்வதற்கும் உபயோகப்படும் கருவியாகும்.
  • இது உலக வங்கி மன்றம் தனது உறுப்பு நாடுகள் அதன் தீவிர வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிக்கு உதவுவதன் மூலம் முக்கிய நோக்கங்களையும், வளர்ச்சி முடிவுகளையும் அடையாளப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்