நாணயக் கொள்கை குழுவின் அறிவிப்புகள்
October 10 , 2021
1143 days
497
- இந்திய ரிசர்வ் வங்கியின் 3 உறுப்பினர்கள் கொண்ட நாணயக் கொள்கை குழுவானது இசைவு நிலைப்பாடுகளைக் கடைபிடித்து, 4% ரெப்போ வீதத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது.
- இது கோவிட்-19 தொற்றின் தாக்கத்தைக் குறைத்து வளர்ச்சியை மீட்டு அதனை நிலை நிறுத்துவதற்கான ஒரு முடிவாகும்.
- பணவீக்கமானது வரம்பிற்குள் இருப்பதையும் நாணயக் கொள்கைக் குழு உறுதி செய்துள்ளது.
- தலைகீழ் ரெப்போ வீதமும், முன்பைப் போலவே 3.35 சதவீதமாக வைக்கப் பட்டுள்ளது.
- விளிம்பு நிலை வசதி (மேம்படுத்தப் பட்ட கடன் வசதி) மற்றும் வங்கி வீதம் ஆகியவையும் 4.25 சதவீதத்தில் இருந்து மாற்றாமல் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
- கொள்கை வீதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து 8வது முறையாக இந்த நிலைப்பாட்டைக் கடைபிடிக்கிறது.
Post Views:
497