நாணயம் மற்றும் நிதி தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை
May 9 , 2023 565 days 271 0
இந்த அறிக்கையின் முக்கியக் கருத்துருவானது ‘பசுமையான மற்றும் தூய்மையான இந்தியாவை நோக்கி’ என்பதாகும்.
இந்தியாவில் நிலையான அதிக வளர்ச்சிக்கான எதிர்காலச் சவால்களை மதிப்பிடச் செய்வதற்காக பருவநிலை மாற்றத்தின் நான்கு முக்கியப் பரிமாணங்களை இந்த அறிக்கை உள்ளடக்கியது.
பருவ நிலை மாற்றத்தின் எதிர்பாராத அளவு மற்றும் வேகம்;
அதன் பெரும் பொருளாதாரம் சார்ந்த விளைவுகள்;
நிதி உறுதித் தன்மை மீதான தாக்கங்கள் மற்றும்
பருவநிலை இடர்களைக் குறைப்பதற்கான கொள்கை விருப்பத் தேர்வுகள்.
2030 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பசுமை நிதித் தேவையானது, ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.