TNPSC Thervupettagam

நாணய கொள்கை அறிக்கை - இந்திய ரிசர்வ் வங்கி

February 9 , 2018 2482 days 943 0
  • நடப்பு நிதியாண்டிற்கான தன்னுடைய கடைசி இருமாத காலத்திற்கான நாணய கொள்கை (Bi-monthly Monetary) மதிப்பாய்வை இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு சமர்ப்பித்துள்ளது.
  • மறுகொள்முதல் வீதம் (Repo rate) மாற்றப்படாமல் 6 சதவீதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ரொக்கத் தகவமைப்பு வசதிக்கு (liquidity adjustment facility) கீழ் வரும் நேர்மாற்று மறுகொள்முதல் வீதம் (Reverse repo rate) மாற்றப்படாமல் 75 சதவீதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விளிம்பு நிலை வசதி (Marginal standing facility) மற்றும் வங்கி வீதமும் (Bank Rate) மாற்றப்படாமல் 25 சதவீதமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • உலக பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை (uncertainty) மற்றும் பணவீக்கம் (inflation) ஆகியவற்றின் அடிப்படையில் நாணய கொள்கையில் மாற்றங்கள் முடிவு செய்யப்படுகின்றன.

நாணய கொள்கைக் குழு

  • இந்தியாவில் உள்ள வங்கிகளின் தினசரி அலுவலில் கையாளப்படும் வட்டி விகிதங்களினை நிர்ணயிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு குழுவே நாணய கொள்கைக் குழுவாகும் (Monetary Policy Committee).
  • இக்குழுவானது ஆறு உறுப்பினர்களை கொண்டது.
  • இதில் இந்திய ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும், இந்திய அரசால் நியமிக்கப்படும் மூன்று அதிகாரிகளும் அடங்குவர்.
  • ரிசர்வ் வங்கியின் ஆளுநரே இந்தக் குழுவின் பதவி வழி சார் தலைவராவார் (Ex-officio chairperson).
  • மேலும் இவர் முடிவெடுப்புகளில் சமநிலை உண்டாகும்போது இறுதி வாக்கை (Casting Vote) செலுத்தும் அதிகாரம் கொண்டவராவார்.
  • இக்குழு பொதுவாக இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடும். ஆண்டிற்கு குறைந்தபட்சம் நான்கு முறையாவது இக்குழு சந்திக்க வேண்டுமென்பது கட்டாயமாகும்.
  • ஒவ்வொரு சந்திப்பின் பிறகும், வங்கி வட்டி விகிதங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை இது வெளியிடும்.
  • இந்தியாவின் நாணய கொள்கைகளை நிர்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை ஏற்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டு இக்குழு ஏற்படுத்தப்பட்டது.
  • நாட்டின் பணவீக்கத்தை (Inflation) 2021 வரை 4% (+2% or -2%)  என்ற அளவிலேயே கட்டுப்படுத்தி பராமரிப்பதற்கான பொறுப்பு நாணய கொள்கைக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்