TNPSC Thervupettagam

நானோகாம்போசிட் மேல்பூச்சுகள்

March 20 , 2020 1586 days 557 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையமான தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையமானது (ARCI - Advanced Research Centre for Powder Metallurgy & New Materials) நானோகாம்போசிட் பூச்சுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு கொண்ட படிவுகளுக்கான செயல்முறையை உருவாக்கியுள்ளது.
  • புதிய பொருட்களின் இயற்பியல், வேதியியல் மற்றும் இயற்பியல் - வேதியியல் பண்புகளை மேம்படுத்துவதற்காக நானோ அளவிலான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேறுபட்ட பொருட்களைக் கலப்பதன் மூலம் நானோகாம்போசிட் பூச்சுகள் உருவாக்கப் படுகின்றன.
  • மின்னாற் பூசும் முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அளவிலான சிலிக்கான் கார்பைடு (sized Silicon Carbide - SiC) துகள்களின் உட்செலுத்தலின் மூலம் உருவாக்கப்பட்ட நிக்கல் டங்ஸ்டனை அடிப்படையாகக் கொண்ட பூச்சுகளால் தேய்வு மற்றும் அரிப்பு எதிர்ப்புத் தன்மை கொண்ட சிறந்த கலவையை வழங்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் கூறுகளின் செயல்படும் காலத்தை மேம்படுத்துவதற்காக பல விண்வெளி, பாதுகாப்பு, தானியங்கி, விண்வெளி சாதனங்கள் உராய்வு, தேய்மானம் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்