மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையமான தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையமானது (ARCI - Advanced Research Centre for Powder Metallurgy & New Materials) நானோகாம்போசிட் பூச்சுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு கொண்ட படிவுகளுக்கான செயல்முறையை உருவாக்கியுள்ளது.
புதிய பொருட்களின் இயற்பியல், வேதியியல் மற்றும் இயற்பியல் - வேதியியல் பண்புகளை மேம்படுத்துவதற்காக நானோ அளவிலான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேறுபட்ட பொருட்களைக் கலப்பதன் மூலம் நானோகாம்போசிட் பூச்சுகள் உருவாக்கப் படுகின்றன.
மின்னாற் பூசும் முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அளவிலான சிலிக்கான் கார்பைடு (sized Silicon Carbide - SiC) துகள்களின் உட்செலுத்தலின் மூலம் உருவாக்கப்பட்ட நிக்கல் டங்ஸ்டனை அடிப்படையாகக் கொண்ட பூச்சுகளால் தேய்வு மற்றும் அரிப்பு எதிர்ப்புத் தன்மை கொண்ட சிறந்த கலவையை வழங்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கூறுகளின் செயல்படும் காலத்தை மேம்படுத்துவதற்காக பல விண்வெளி, பாதுகாப்பு, தானியங்கி, விண்வெளி சாதனங்கள் உராய்வு, தேய்மானம் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும்.