TNPSC Thervupettagam
April 20 , 2021 1225 days 568 0
  • மத்தியக் கல்வி அமைச்சர் சமீபத்தில் உலகின் முதல் நுண் உணர்வி அடிப்படையில் அமைந்த சிறு அளவு வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவியான (Explosive Trace Detection) “நானோ நுகர்வி” என்ற ஒரு கருவியினை (NanoSniffer) அறிமுகப் படுத்தினார்.
  • பம்பாய் ஐ.ஐ.டி நிறுவனத்தால் உதவி பெறும் ஒரு புத்தாக்க தொடக்க நிறுவனமான நானோஸ்னிஃப் டெக்னாலஜிஸ் (NanoSniff Technologies) என்ற ஒரு நிறுவனத்தால் இது உருவாக்கப் பட்டது.
  • நானோ நுகர்வியால் பத்து வினாடிகளுக்குள் வெடிபொருட்களைக் கண்டறிய முடியும்.
  • இதனால் அனைத்து வகையான, இராணுவம் மற்றும் தனிநபர் தயாரிக்கும் வழக்கமான வெடிபொருட்களைக் கண்டறிய முடியும்.
  • இதனால் நானோ கிராம் அளவு வெடிபொருட்களைக் கூட கண்டறிய முடியும்.
  • Explosive Trace Detection என்பது சிறிய அளவிலான வெடிபொருட்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும்.
  • இந்த  தொழில்நுட்பத்தின் மூன்று முக்கிய பண்புகள் உணர்திறன், குறைந்த எடை மற்றும் அளவு ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்