நான்காவது உலகளாவிய பவளப்பாறை வெளிர்தல் (GCBE4) நிகழ்வு ஆனது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது.
இது தற்போது மிகவும் பெரும் பரவலாக காணப்படுகின்றதாகவும், 2014-2017 ஆகிய ஆண்டுகளில் இருந்த பவளப்பாறை வெளிர்தல் நிலைகளை விட 11 சதவீதத்திற்கும் அதிகமாக விஞ்சியதாகவும் உள்ளது.
இந்தக் கடுமையான மற்றும் தீவிரமான உலகளாவியப் பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வு முந்தைய நிகழ்வை விட கிட்டத்தட்ட பாதி நேரத்தில் நிகழ்ந்ததாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
GCBE4 நிகழ்வின் ஒரு பெரும் பகுதியாக 20 மாதங்களில் குறைந்தபட்சம் 77 சதவீத உலகளாவியப் பவளப்பாறைப் பகுதிகள் வெளிர்தல் அளவிலானப் பெரும் வெப்பத் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பவளப்பாறைப் பகுதிகளில் சுமார் 99.9 சதவீதப் பகுதிகள் ஆனது இந்த நிகழ்வின் போது வெளிர்தல் அளவிலான பெரும் வெப்பத் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.