முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நான்காவது காவல்துறை ஆணையத்தினை அமைப்பதற்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி C.T. செல்வம், என்பவரை இக்குழுவின் தலைவராக நியமித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காவல்துறை ஆணையத்திற்கு ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை தாங்க உள்ளது இதுவே முதன்முறையாக ஆகும்.
ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி K.அலாவுதீன், ஓய்வு பெற்ற இந்திய காவல் பணி அதிகாரி K.ராதாகிருஷ்ணன், டாக்டர் C.ராமசுப்ரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
மூத்த இந்திய காவல்பணி அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால் இந்தக் குழுவின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார்.
இந்தக் காவல்துறை ஆணையக் குழுவானது காவல் பணியாளர்களின் நலன் மற்றும் காவல் தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சமர்ப்பிக்கும்.