மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜவஹவர்லால் நேரு துறைமுகக் கழகத்தின் நான்காவது சரக்குப் பெட்டக முனையத்தை பிரதமர் துவக்கி வைத்தார்.
இதனோடு சேர்த்து இந்த துறைமுகத்தின் சரக்குகளைக் கையாளும் திறன் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய சரக்குப் பெட்டக முனையம் இதுவேயாகும்.
இந்த முனையம் தாய்க்கப்பல் எனப்படும் நீண்டதூரம் செல்லும் கப்பல்களையும் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களையும் ஒரு கிலோமீட்டர் ஓடந்துறையில் வைத்து கையாளும் திறன் கொண்டது.
நான்காவது சரக்குப் பெட்டக முனையம் வடிவமைப்பு, கட்டுமானம், நிதியுதவி, இயக்கம் மற்றும் பரிமாற்றம் என்ற அடிப்படையில் 30 வருட காலத்திற்கான சலுகைக் கால அளவில் 7915 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு இருக்கின்றது.
இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டது.
இந்த முனையம் தனி வழியான சரக்கு இரயில் பாதையோடும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே தடத்தில் (பாதையில்) 350 பெட்டகங்களை நிறுத்தும் வசதியும் கொண்டது.