TNPSC Thervupettagam

நான்கு டைனோசர் இனங்கள் கண்டுபிடிப்பு

January 24 , 2023 544 days 273 0
  • மெகாராப்டர் உள்ளிட்ட நான்கு வகை டைனோசர் இனங்களின் எஞ்சிய பாகங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • அர்ஜென்டினாவின் எல்லைக்கு அருகில் உள்ள தெற்கு சிலியின் லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் உள்ள செரோ கைடோவில் இந்தப் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
  • அவை இதுவரை அப்பகுதியில் அடையாளம் காணப்படாத டைனோசர் இனங்களைச் சேர்ந்தவையாகும்.
  • மெகாராப்டர் இனங்கள் கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த ஒரு பெரிய தெரோபாட் இன டைனோசர் ஆகும்.
  • இந்த மாமிச உண்ணும் டைனோசர்கள், ராப்டார் இன உயிரினங்களின் நகங்கள், கிழிப்பதற்கு ஏதுவான சிறிய பற்கள் மற்றும் பெரிய மேல்கால் மூட்டுகளை கொண்டு இருந்தன.
  • அவை 66 முதல் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியஸ் காலத்தின் முடிவின் போது வாழ்ந்தவையாகும்.
  • புவியியல் காலத்தில், கிரெட்டேசியஸ் காலம் என்பது மீசோசோயிக் சகாப்தத்தின் மூன்று கால கட்டங்களின் கடைசி கால கட்டமாகும்.
  • கிரெட்டேசியஸ் காலமானது, 145.0 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது.
  • தெரோபாட் குழுவில் இதுவரையில்  அறியப்பட்ட அனைத்து வகை மாமிசம் உண்ணும் டைனோசர்களும் மற்றும் பறவைகளும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்