மலை இருவாட்சி, மலபார் கருப்பு வெள்ளை இருவாட்சி, இந்திய சாம்பல் இருவாட்சி மற்றும் மலபார் சாம்பல் இருவாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறப்பு மையத்தினை நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒன்பது இருவாட்சிப் பறவைகளில் நான்கிற்கு இந்த மாநிலம் ஒரு கடைசிப் புகலிடமாக உள்ளதை இந்த மாநிலம் ஒரு பெருமையாக கொண்டுள்ளது.
வனத்துறையானது, வளங்காப்பிற்காக ஆனைமலைப் புலிகள் சரணாலயம் (மலபார் சாம்பல் இருவாட்சி மற்றும் மலை இருவாட்சி ஆகியவற்றிற்காக என்று), அத்திக்கடவு-பில்லூர்-பவானிசாகர் பள்ளத்தாக்குப் பகுதி (மலபார் கருப்பு வெள்ளை இருவாட்சி ஆகியவற்றிற்காக) மற்றும் சத்தியமங்கலம் போன்ற சில வறண்ட காடுகள் (இந்திய சாம்பல் இருவாட்சி ஆகிய ஒன்றிற்காக) ஆகிய முக்கியப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.
மலை இருவாட்சி மற்றும் மலபார் சாம்பல் இருவாட்சி ஆகியவை IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'எளிதில் பாதிக்கப்படக்கூடிய' இனங்களாகப் பட்டியலிடப் பட்டு உள்ளன.
மலபார் கருப்பு வெள்ளை இருவாட்சி ஆனது, 'அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த' இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
நாட்டில் மிகப் பரவலாக காணப்படும் இந்திய சாம்பல் இருவாட்சி, 'தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்' என்ற பிரிவில் உள்ளது.
இருவாட்சிப் பறவைகள் ஆனது தாங்களாகவேப் பொந்துகளை உருவாக்குவதில்லை மாறாக ஏற்கனவே மரங்களில் உள்ள சில பொந்துகளில் தங்கும் இரண்டாம் நிலைப் பறவைகள் ஆகும் என்பதோடு மேலும் அதே பொந்துகளை பல ஆண்டுகளுக்கு என்று முட்டையிடப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் இது அப்பறவைகள் முட்டையிட வேண்டிப் பயன்படுத்தப்படும் மரங்களான டிப்டீரோகார்பஸ் இன்டிக்கஸ், கிரிப்டோகார்யா அனமல்யனா மற்றும் மைரிஸ்டிகா மலபாரிகா ஆகியவற்றைப் பாதுகாக்கும் திட்டத்தினையும் உள்ளடக்கியதாகும்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் அல்லது International Union for Conservation of Nature என்ற அமைப்பின் ஒரு கூற்றுப்படி டிப்டீரோகார்பஸ் இன்டிக்கஸ் மற்றும் கிரிப்டோகார்யா அனமல்யனா ஆகிய இரண்டும் ஆபத்தில் (endangered) உள்ளது என்ற ஒரு நிலையில் மைரிஸ்டிகா மலபாரிகா என்பது பாதிக்கப்படக் கூடியது (vulnerable) என்ற ஒரு நிலையில் உள்ளது.