TNPSC Thervupettagam

நான்சி கிரேஸ் ரோமன் தொலைநோக்கி

May 15 , 2024 193 days 231 0
  • நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கியானது ஓர் அற்புதமான ஆய்வுப் பணியைத் தொடங்க தயாராக உள்ளது.
  • இது பெருவெடிப்பு காலத்திற்கு பல பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கருந்துளைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள தொடங்கும்.
  • இந்த ஆய்வுப் பணியானது 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.
  • அத்தகைய "பழமையான கருந்துளைகள்" இருப்பது நிரூபிக்கப் பட்டால், சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்டத்தின் ஆரம்ப காலத்திய சகாப்தங்களைப் பற்றிய நமது புரிதலுக்கு இது சவாலாக அமையும்.
  • ஹாக்கிங்கின் ஹாக்கிங் கதிர்வீச்சு கோட்பாடு ஆனது கருந்துளைகள் கதிர்வீச்சை "கசியச்" செய்து இறுதியில் ஆவியாகிவிடும் என்று முன்மொழிகிறது.
  • பிரதான கருந்துளைகள் ஆவியாகாமல் பல பில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்க, அவை ஹாக்கிங்கின் கணிப்புகளை மீறியதாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்