ஹரியானா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில மொழியை ஊக்கப்படுத்த அம்மாநில கல்வித் துறையானது ‘நான் ஆங்கிலத்தைக் கண்டு பயப்படவில்லை’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் நோக்கம் ஆசிரியர்களுக்கு அடிப்படை கட்டுமானத் திறனை மேம்படுத்துவதாகும். இதன் மூலம் குழந்தைகள் ஆங்கிலத்தில் அறியவும், படிக்கவும், எழுதவும் மற்றும் பேசவும் ஆசிரியர்கள் உதவுவார்கள்.
இம்முயற்சியானது ஏற்கனவே 180 ஆரம்பப் பள்ளிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘Human a people to people india‘ என்ற நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
180 ஆரம்பப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட இம்முயற்சியானது முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாதுகாப்புப் பெட்டக வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ‘பைகளற்ற முறை’ (bag free) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே போன்ற முயற்சியை உத்தரகாண்ட் மாநில அரசு தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக 18,000 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பயிற்று மொழியாக இருந்த இந்தியை ஆங்கிலத்திற்கு அம்மாநில அரசு மாற்றியுள்ளது.