TNPSC Thervupettagam

நான் முதல்வன் - உயர்வுக்குப் படி திட்டம்

September 7 , 2024 77 days 178 0
  • தமிழக மாநில அரசானது, பன்னிரண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் மாநில வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
  • நான் முதல்வன் திட்டத்தின் (உயர்வுக்குப் படி) கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாநிலத் திட்ட இயக்குநரகத்தினால் இந்தச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.
  • மாநிலத்தில் உள்ள பொறியியல், பலதொழில் நுணுக்கப் பயிற்சி, கலை, அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளில் உயர்கல்வி பயிலப் பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்காக இந்தச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
  • கல்லூரிகளில் உள்ள காலியிடங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரடியாக மாணாக்கர் சேர்க்கையும் மேற்கொள்ளப்படும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 3,97,809 மாணாக்கர்களில், 2,39,270 மாணாக்கர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் மற்றும் 45,440 மாணாக்கர்கள் உயர்கல்வியினைப் பெற விண்ணப்பித்துள்ளனர்.
  • சுமார் 1,13,099 மாணாக்கர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கவில்லை அல்லது பதிவு செய்ததற்கான போதுமான விவரங்களை வழங்கவில்லை.
  • 2023-2024 ஆம் ஆண்டில், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 3,31,540 மாணாக்கர்களில், 1,97,510 மாணாக்கர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனர்.
  • சுமார் 1,34,030 மாணாக்கர்கள் விண்ணப்பிக்கவில்லை அல்லது விண்ணப்பம் குறித்த போதுமான விவரங்களை வழங்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்