மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பல் துறைப் பயிற்சி வழங்கீட்டு (பாலிடெக்னிக்) கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 25,888 மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பயன் மிக்க வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு அரசாங்கம் உதவுகிறது.
இதுவரை 252 கல்லூரிகள் இந்த வேலை வாய்ப்பு இயக்கத்தில் பங்கேற்றுள்ளன.
சுமார் 58,000 மாணவர்கள் தங்கள் கல்விப் படிப்பின் இறுதி ஆண்டில் உள்ளனர்.