டோலே என்று அழைக்கப்படும் ஆசியக் காட்டு நாய்களின் கூட்டமானது முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் அமைந்துள்ள பொக்காபுரத்தைச் சுற்றி காணப்படுவதாக அறியப்படுகிறது.
ஒட்டுண்ணிப் பூச்சிகளால் ஏற்படும் மாங்கே எனப்படும் ஒரு வகை தோல் நோயினால் மூன்று விலங்குகள் பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
பூச்சிகளின் தாக்குதலால் ஏற்படும் விலங்குகளின் மீதான தோல் நோயான மாங்கே நோய் என்பது வீக்கம், அரிப்பு, தோல் தடித்தல் மற்றும் முடி உதிர்தல் ஆகிய பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மிகவும் கடுமையான மாங்கே நோய் பாதிப்பானது, மனிதர்களில் மிகக் கடும் சொறி சிரங்குகளையும் ஏற்படுத்துகின்ற சர்கோப்டெஸ் ஸ்கேபி என்ற ஒட்டுண்ணிப் பூச்சி வகைகளால் ஏற்படுகிறது.