TNPSC Thervupettagam
March 10 , 2022 867 days 483 0
  • புதுடெல்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனில் 2022 ஆம் ஆண்டு மார்ச் 08 அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான நாரிசக்தி புரஷ்கர் விருதுகளை வழங்கினார்.
  • ஒட்டு மொத்தமாக 29 பெண்களுக்கு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • பெண்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய மற்றும் விளிம்பு நிலையிலுள்ள பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ஆற்றிய சிறப்பான மற்றும் தனித்துவமிக்க பணிகளைப் பாராட்டி இவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • நீலகிரியின் பழமை வாய்ந்த மற்றும் சிக்கல் மிகுந்த தோடா சித்திர வேலைப் பாடுகளைப் பாதுகாத்து மேம்படுத்தியதற்காக நீலகிரியைச் சேர்ந்த ஜெயா முத்து மற்றும் தேஜம்மா ஆகியோருக்கு 2020 ஆம் ஆண்டிற்கான நாரிசக்தி புரஷ்கர் விருதானது வழங்கப்பட்டது.
  • மனநலக் குறைபாடு மற்றும் அதன் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஆற்றிய புதுமைமிக்க மற்றும் இடைவிடா முயற்சிகளுக்காக வேண்டி சென்னையைச் சேர்ந்த தாரா ரங்கசாமிக்கு 2021 ஆம் ஆண்டிற்கான நாரிசக்தி புரஷ்கர் விருதானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்