சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 அன்று டெல்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் 9 புகழ்பெற்ற நிறுவனங்கள், மற்றும் 30 சிறந்த தனிநபர்களுக்கு 2017 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி புரஷ்கார் விருதை இந்திய குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.
பெண்களின் மேம்பாட்டிற்காக, குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய (vulnerable) நலிவடைந்த பெண்களின் (marginalized women) முன்னேற்றத்திற்காக தனித்துவ சேவை புரிந்தமைக்காக அதனை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருதைப் பற்றி
1991 ஆம் ஆண்டு நாரி சக்தி புரஷ்கார் விருது நிறுவப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 அன்று இவ்விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றது.
தேர்ந்தெடுக்கப்படும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், சான்றிதழும் இவ்விருதில் வழங்கப்படும்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தகுப் பங்கினை வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களுக்கு இந்த தேசிய அளவிலான விருதினை ஆண்டுதோறும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிக்கின்றது.