TNPSC Thervupettagam
March 17 , 2018 2446 days 766 0
  • சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 அன்று டெல்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் 9 புகழ்பெற்ற நிறுவனங்கள், மற்றும் 30 சிறந்த தனிநபர்களுக்கு 2017 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி புரஷ்கார் விருதை இந்திய குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.
  • பெண்களின் மேம்பாட்டிற்காக, குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய (vulnerable) நலிவடைந்த பெண்களின் (marginalized women) முன்னேற்றத்திற்காக தனித்துவ சேவை புரிந்தமைக்காக அதனை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருதைப் பற்றி

  • 1991 ஆம் ஆண்டு நாரி சக்தி புரஷ்கார் விருது  நிறுவப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 அன்று இவ்விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றது.
  • தேர்ந்தெடுக்கப்படும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பரிசாக ஒரு லட்சம் ரூபாயும்,  சான்றிதழும் இவ்விருதில் வழங்கப்படும்.
  • பெண்களின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தகுப் பங்கினை வழங்கும்  நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களுக்கு   இந்த தேசிய அளவிலான விருதினை ஆண்டுதோறும்  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்