TNPSC Thervupettagam

நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா, 2023

December 27 , 2023 338 days 309 0
  • இந்த மசோதா, பதிப்பகத் துறையை நிர்வகிக்கும் ஆங்கிலேயர் காலத்துச் சட்டத்தை மாற்றியமைத்து, பருவ இதழ்களை பதிவு செய்யும் செயல்முறையை எளிதாக்கும்.
  • இது பழங்காலச் சட்டத்தில் உள்ள பருவ இதழ்களை பதிவு செய்வதற்கான எட்டு படிநிலை செயல்முறையை ஒரே படி செயல்முறையாக மாற்றும்.
  • இந்த மசோதா, 1867 ஆம் ஆண்டு அச்சிடுதல் மற்றும் பதிவு செய்தல் (PRB) சட்டத்தை மாற்றியமைக்கிறது.
  • முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட 2 முதல் 3 ஆண்டுகள் என்ற காத்திருப்பு காலத்திற்குப் பதிலாக நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் வெளியீட்டு நிறுவனங்கள் தற்போது 60 நாட்களுக்குள் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
  • சில விதிமீறல்களுக்கு, முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்குப் பதிலாக அபராதம் சார்ந்த சில தண்டனைகள் விதிக்கப்படுவதற்கு முன்மொழியப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்