TNPSC Thervupettagam

நாஸ்கா வரி பூனை – வரைபடம்

October 24 , 2020 1493 days 723 0
  • பெருவைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள் பெருவின் புகழ்பெற்ற நாஸ்கா வரிகளில் 37 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பூனை வரைபடத்தைக் கண்டுபிடித்து உள்ளனர்.
  • இது ஓர் உலகம் அறிந்த யுனெஸ்கோ பாரம்பரியத் தளமாகும்.
  • நாஸ்கா வரிகளானது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நூற்றுக்கணக்கான மிகப்பெரிய புவியியல் வரைபட அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட இந்தப் பூனையின் வரைபடமானது இதற்கு முன்பு கண்டுபிடிக்கப் பட்டதை விட மிகப் பழமையானதாகும்.
  • இந்தப் பூனை வரைபடமானது 37 மீட்டர் நீளம் கொண்டதாகவும் பராகஸ் சகாப்தமான கி.மு. 500 முதல் கி.பி. 200 என்ற ஒரு காலக்கட்டத்தைச் சார்ந்ததாகவும் உள்ளது.
  • நாஸ்கா வரிகள் என்பவை சரளைக் கல், கற்கள் அல்லது மரம் வெட்டுத் தூசு போன்ற புவியியல் கூறுகளைப் பயன்படுத்தி நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள புவியியல் வரைபடத் தோற்றங்களின் ஒரு குழுவாகும்.
  • இந்த வரிகள் 1927 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டன
  • இது 1994 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ பாரம்பரியத் தளமாக அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்