தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், நாஸ்கா பாலைவனத்தில் செதுக்கப்பட்ட இதுவரையில் அறியப்படாத அளவில் 303 மாபெரும் சின்னங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் செதுக்கல்களில் பறவைகள், தாவரங்கள், சிலந்திகள், தலைக்கவசம் கொண்ட மனித உருவங்கள், துண்டிக்கப்பட்டத் தலைகள் மற்றும் கத்தியை ஏந்திய ஓர்கா என்ற திமிங்கலம் போன்றவை அடங்கும்.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையக் கற்கள் அல்லது சரளைகளை நகர்த்தியதன் மூலம் இந்த மர்மமான கலைப்படைப்புகள் தரையில் உருவாக்கப் பட்டுள்ளன.