இந்தியாவின் நிகர குடும்ப சேமிப்பு ஆனது, 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் நிகர குடும்ப சேமிப்பானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது.
இது 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 7.3 சதவீதத்தினை விட மிக குறைந்த அளவாகும்.
இதே காலக்கட்டத்தில் வீட்டுக் கடன்களிலும் அதிகபட்ச மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வருடாந்திரக் கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% ஆக உள்ளது என்ற நிலையில் இது 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும்.