வர்த்தகத் தீர்வுகள் இயக்குநரகம் (Directorate General of Trade Remedies - DGTR) ஆனது இந்தியத் தொழில் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான வர்த்தகத்தில் தீர்வுகளுக்கான நிகழ்நேர முறைகளுக்கான (Applications for Remedies in Trade for Indian Industry and other Stakeholders - ARTIS) விண்ணப்பங்களை அறிமுகப் படுத்தியது.
விலைபொருள்களைப் பதுக்கி வைத்தல் தொடர்பான சிக்கல்களை விரைவாகத் தீர்க்க உள்நாட்டுத் தொழில்துறையால் விலைபொருள் குவிப்புக்கு எதிரான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய இது பயன்படுத்தப்படும்.
வர்த்தகத் தீர்வுகள் இயக்குநரகம் (DGTR)
இந்த அமைப்பு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
விலைபொருள்களைப் பதுக்கி வைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள், குறிப்பிட்ட பொருள்களின் மீது இறக்குமதி வரியை அதிகரித்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட அனைத்து வர்த்தக குறைதீர்ப்பு நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான உச்ச பட்ச தேசிய அளவிலான ஆணையமாக இது விளங்குகின்றது.