TNPSC Thervupettagam

நிகழ்நேர பெருந்திரள் தீர்வு

May 30 , 2019 2008 days 800 0
  • இந்திய ரிசர்வ் வங்கி அதிக அளவிலான நிதிப் பரிமாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிகழ்நேர பெருந்திரள் தீர்வின் (Real Time Gross Settlement - RTGS) மூலம் வாடிக்கையாளர்களின் நிதிப் பரிமாற்றங்களுக்கான கால அளவை நீட்டித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் 01 ஆம் தேதியிலிருந்து நிதிப் பரிமாற்றத்திற்கான நேரம் ஒன்றரை மணி நேரம் நீட்டிக்கப்படும். அதாவது மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணி வரை அது நீட்டிக்கப்படும்.
  • இங்கு நிகழ் நேரம் என்பது வங்கிப் பணியாளர்கள் தாங்கள் பெற்ற அறிவுறுத்தல்களை செயல்படுத்துவதைக் குறிக்கின்றது.
  • இங்கு “பெருந்திரள் தீர்வு” என்பது நிதிப் பரிமாற்ற செயல்முறைகள், அறிவுறுத்தல்கள் ஆகியவை தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை (National Electronic Fund Transfer – NEFT) போன்று தொகுப்புகளாக அல்லாமல் தனித்தனியாக நிகழ்வதைக் குறிக்கின்றது.
  • RTGS திட்டத்தின் வழியாக பரிமாற்றப்படும் நிதிக்கு எதுவும் “உச்ச வரம்பு” நிர்ணயிக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்