June 4 , 2020
1638 days
639
- இந்திய எரிசக்திப் பரிமாற்றமானது நிகழ்நேர மின்சாரச் சந்தைத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- மின் விநியோக நிறுவனங்களின் மின் தேவைகளை அவர்கள் திட்டமிட உதவுவதே இந்த அறிமுகத்தின் முக்கிய நோக்கமாகும்.
- விநியோக நிறுவனங்களின் மின் தேவை-விநியோக மாறுபாட்டை நிர்வகிக்க இது உதவும்.
- இது விநியோக நிறுவனங்களின் முன்கணிப்பு மற்றும் பசுமை ஆற்றலைத் திட்டமிட உதவும்.
- இது 2022 ஆம் ஆண்டில் இந்தியா 175 ஜிகாவாட் அளவிற்குப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய உதவும்.
- இந்திய எரிசக்திப் பரிமாற்றம் என்பது மின்னணு முறையில் இயங்கும் ஒரு அமைப்பாகும். இது மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது.
Post Views:
639