TNPSC Thervupettagam

நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான உலகக் கூட்டணியின் 10-வது சந்திப்பு

June 20 , 2018 2351 days 813 0
  • நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான உலகக் கூட்டணியின் (Global Alliance to Eliminate Lymphatic Filariasis-GAELF) 10வது சந்திப்பு அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது.
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை (Ministery of Health and Family Welfare) அமைச்சரானP நட்டா இந்தச் சந்திப்பை துவக்கி வைத்தார்.

  • நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான உலகக் கூட்டணியின் சந்திப்பு இரண்டாவது முறையாக இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
  • இதற்கு முன் 2002 ஆம் ஆண்டு நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான உலகக் கூட்டணியின் இரண்டாவது சந்திப்பை இந்தியா நடத்தியது.
  • நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் (WHO-world health organisation) உலகளாவியத் திட்டங்களுக்கு உதவி புரிகின்ற சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் துறைகள், குறிப்பிட்ட பகுதித் தோற்றமுள்ள நிணநீர் யானைக்கால் நோய் நிலவுகின்ற 72 நாடுகளின் தேசியத் திட்டங்கள் ஆகியவற்றைச்  சேர்ந்த பங்களிப்பாளர்களின் கூட்டணியே நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான உலகக் கூட்டணி ஆகும்.
  • இந்த கூட்டணியானது 2001 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இரண்டு ஆண்டுக்கு (Biennially) ஒருமுறை இக்கூட்டணியின் சந்திப்பு நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்