TNPSC Thervupettagam

நிதிநிலை செயல்பாட்டுப் பணிப் படை – பாகிஸ்தான்

August 24 , 2019 1827 days 588 0
  • நிதிநிலை செயல்பாட்டுப் பணிப் படையின் (Financial Action Task Force - FATF) ஆசிய பசிபிக் குழுவின் கீழ்நிலை அல்லது கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப் பட்டுள்ளது.
  • பயங்கரவாத நிதியுதவி மற்றும் பணமோசடிக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்காததற்காகவும் அதனை நடைமுறைப் படுத்தாதற்காகவும் பாகிஸ்தான் இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
  • பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக நிதி நிதிநிலை செயல்பாட்டுப் பணிப் படை (FATF) ஏற்கனவே பாகிஸ்தானை ‘சாம்பல் நிறப் பட்டியலில்’ வைத்திருந்தது.
  • FATF ஆனது விசாரணை செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை.
  • FATF கருப்புப் பட்டியல் அல்லது OECD (பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு - Organisation for Economic Co-operation and Development) கருப்புப் பட்டியல் ஆனது 2000 ஆம் ஆண்டிலிருந்து FATF ஆல் வழங்கப்பட்டு வருகின்றது.
  • சர்வதேச நிதியியல் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான  பண மோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் பிற தொடர்புடைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதே FATF இன் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்