TNPSC Thervupettagam

நிதிப் பற்றாக்குறை இலக்கு

March 31 , 2019 1938 days 593 0
  • இந்திய அரசானது 2018-19 ஆம் நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை அடையத் தவறிவிட்டது.
  • 2018 ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாகும். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நிதிப் பற்றாக் குறையின் இலக்கு 3.2 சதவிகிதமாகும்.
  • திருத்தப்பட்ட மதிப்பீட்டில் முழு ஆண்டிற்கான நிதிப் பற்றாக் குறையானது ரூ. 6.34 லட்சம் கோடி இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்பொழுது நிதிப் பற்றாக்குறையின் மதிப்பு ரூ. 8.51 லட்சம் கோடியாக இருக்கிறது.
  • எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வரி வசூலிப்பு மற்றும் தொடர் அரசாங்கச் செலவினங்கள் ஆகியவை இந்த நிதிப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணங்களாகும்.
  • அடுத்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறையின் இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவிகிதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்