நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் உறுப்பினர் அந்தஸ்து-ரஷ்யா
March 3 , 2023 635 days 274 0
நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவானது ரஷ்யாவின் உறுப்பினர் அந்தஸ்தினை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
ஆனால் ரஷ்யக் கூட்டமைப்பு ஆனது அதன் நிதிசார் கடமைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.
நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்காவின் இரண்டு பெரியப் பொருளாதாரங்களை "சாம்பல் நிறப் பட்டியலில்" சேர்த்துள்ளது.
மொராக்கோ மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு நாடுகள் தங்களது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தியதையடுத்து இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு என்பது 1989 ஆம் ஆண்டில் ஜி7 என்ற அமைப்பால் ஏற்படுத்தப் பட்ட அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பு ஆகும்.
இது உலகளாவியத் தரநிலைகளை நிர்ணயிப்பதன் மூலமும், உலக நாடுகள் அவற்றை மதிக்கிறதா என்று சோதிப்பதன் மூலமும் பணமோசடி (கறுப்புப் பணப் பரிமாற்றம்) மற்றும் தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் ஆகியவற்றிற்கு எதிராக போராடச் செய்கிறது.