TNPSC Thervupettagam

நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல்நிறப் பட்டியல்

November 1 , 2022 629 days 327 0
  • நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவானது (FATF), பாகிஸ்தான் நாட்டினை "அதிக கண்காணிப்பு தேவையுள்ள" (சாம்பல் நிற  பட்டியல்) நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
  • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப் பட்டு உள்ளது.
  • இது முதலில் 2008 ஆம் ஆண்டில் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டில் நீக்கப் பட்டது என்றாலும், பின்பு 2018 ஆம் ஆண்டில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
  • நிதியியல் நடவடிக்கை பணிக்குழு என்பது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கல் மற்றும் பணமோசடி மீதான சர்வதேச கண்காணிப்பு அமைப்பாகும்.
  • பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களின் உருவாக்கத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்கொள்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1989 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற வளர்ச்சி பெற்ற நாடுகளின் G-7 கூட்டத்தில் அமைக்கப்பட்டது.
  • இந்தியா 2006 ஆம் ஆண்டில் ‘பார்வையாளர்’ அந்தஸ்து பெற்று இந்த அமைப்பில் இணைந்த பின்னர்  2010 ஆம் ஆண்டில் அதன் முழு உறுப்பினரானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்