நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Financial Stability and Development Council - FSDC) 21வது கூட்டமானது சமீபத்தில் நடத்தப்பட்டது.
இது நிதி சார்ந்த கல்வியறிவு மற்றும் நிதியியல் உள்ளடக்கல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
FSDC ஆனது 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் ஆவார்.
இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் பின்வருமாறு:
நிதித் துறை ஒழுங்குமுறை நிறுவனங்களின் தலைவர்கள் (ரிசர்வ் வங்கி, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்மற்றும் இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை),
நிதித் துறைச் செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை,
செயலாளர், நிதிச் சேவைகள் துறை,
தலைமைப் பொருளாதார ஆலோசகர்,
நொடித்தல் மற்றும் திவால் வாரியத்தின் தலைவர்.
FSDCன் துணைக் குழுவானது ரிசர்வ் வங்கியின் ஆளுநரால் தலைமை தாங்கப்படுகின்றது.