நிதி ஆயோக் அமைப்பானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான நாட்டின் இலட்சிய மாவட்டங்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சண்டௌலி மாவட்டமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 57.6 மதிப்பெண்களைப் பெற்று இந்தப் பட்டியலில் முதலிடத்தைத் பிடித்துள்ளது.
இந்தத் தரவரிசையானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆறு வளர்ச்சிப் பகுதிகளில் 112க்கும் மேற்பட்ட இலட்சிய மாவட்டங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளின் முன்னேற்றத்தை கணக்கில் எடுத்துக் கொண்டது.
சுகாதாரம் & ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம் மற்றும் நீர்வளம், நிதியியல் உள்ளடக்கம், திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகியவை இந்த ஆறு வளர்ச்சிப் பகுதிகளாகும்.
இலட்சிய மாவட்டங்கள் திட்டமானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் இலட்சிய மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப் படுகின்றன.