தூய்மையான மற்றும் எளிதில் அணுகிடும் வகையான போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதற்காக “Move Cyclathon” என்ற மிதிவண்டிப் பேரணியை நிதி ஆயோக் துவக்கி வைத்துள்ளது.
“போக்குவரத்து வாரத்தின்” ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்படும் இந்நிகழ்ச்சி ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 6 வரையிலான 7 நாட்களில் 17 வகையான நிகழ்வுகளை கொண்டிருக்கும்.
இந்நிகழ்வு ஆரோக்கியமான வாழ்வையும் குறைந்த மாசு கொண்ட நகரத்தையும் ஊக்குவிப்பதற்காகவும், நன்கு பகிரப்பட்ட, இணைக்கப்பட்ட மற்றும் குறைந்த உமிழ்வு கொண்ட போக்குவரத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காகவும் எண்ணுகின்றது.