TNPSC Thervupettagam

நிதி ஆயோக் அமைப்பின் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு

July 21 , 2023 368 days 223 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் (EPI) தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
  • குஜராத் மாநிலம் இந்த முறை நான்காவது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய/கடலோர மாநிலங்களின் பிரிவுகளில் இடம் பெற்ற முதல் 5 இடங்களில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.
  • கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புவிசார் குறியீடு பெற்றப் பொருட்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
  • இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஏற்றுமதியில் முதல் மூன்று இடங்களில் உள்ள மாவட்டங்கள் காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருப்பூர் ஆகும்.
  • பொறியியல்துறைப் பொருட்களின் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளதைத் தவிர, பட்டு மற்றும் அதன் நிறைவுப் பொருட்களின் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் முன்னணியில் உள்ளது.
  • நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், ஏற்றுமதி மதிப்பில், திருப்பூர் 22வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்